லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று மலையாள நடிகர் டோவினோ தாமச தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். இவர் மாயாநதி, தீவண்டி, தல்லுமாலா, லூசிபர் மின்னல் முரளி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் பல கொடுத்துள்ளார். தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் டோமினோ தாமஸ் நடிப்பில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய ‘2018’ திரைப்படம் கடந்த மே 5 ம் தேதி வெளியாகி இன்று வரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட பேட்டி ஒன்றில் டோவினோ தாமஸ், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
“இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னுடைய தல்லுமாலா படம் பார்த்து விட்டு தொலைபேசி மூலம் என்னை அழைத்து பேசினார். தல்லுமாலா படம் உருவான விதம் அவருக்கு மிகவும் பிடித்தது என்று கூறினார். அந்தப் பாராட்டு நான் எதிர்பாராத ஒன்று. மேலும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளது. விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன்” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.