கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் லிட்டில் மாஸ்டர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் எனவும் அழைக்கப்படுகிறார்.
தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன். வரலாற்றில் 100 சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலிருந்தே விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் ஒரு பல்துறை வீரர், அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.அவர் வலது கையால் விளையாட விரும்பினாலும், இடது கை பழக்கம் கொண்டவர். டெண்டுல்கர் ஒரு வலது கை பேட்டர் ஆவார், அவர் ஆஃப்-ஸ்பின், லெக்ட் ஸ்பின் மற்றும் நடுத்தர வேகத்திலும் பந்து வீசுகிபவர்.
சச்சின் டெண்டுல்கரின் காதல் பயணம்
அவர் தனது முதல் சர்வதேச சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபோது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வாழ்க்கைத் துணையான அஞ்சலியை சந்தித்தார். கண்ணும் கண்ணும் நோக்கியதும், நூறுகோடி மின்னல் பாய்ந்து, பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து, காதல் பூத்தது (LOVE AT FIRST SIGHT).
சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் டாக்டர் அஞ்சலி சச்சினின் மிகப் பெரிய ரசிகர்.
நாட்டின் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்
அஞ்சலி மேத்தா மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். பின்பு மருத்துவம் படித்துள்ளார். சச்சின் அவரது பெற்றோர்களிடம் அஞ்சலியை ஒரு நிருபர் என்றும் நேர்காணலுக்காக வந்துள்ளார் என்றும் அறிமுகம் செய்து வைத்ததாக அஞ்சலி நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.
அஞ்சலிக்கு விளையாட்டு, கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. இருவரும் ஐந்து வருடங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்தனர். பிறகு சச்சினும் அஞ்சலியும் மே 24, 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மருத்துவர் ஆன அஞ்சலி சச்சினை திருமணம் செய்த பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவ தொழிலை கைவிட்டார் இவர்களுக்கு சாரா என்கிற மகளும் அர்ஜுன் என்கிற மகனும் உள்ளார்கள்.
சச்சினுக்கு தனது மகள் அஞ்சலியை திருமணம் முடிக்க முதலில் பயந்ததாக மாமியார் அன்னபெல் மேத்தா தெரிவித்துள்ளார்.
சச்சினும் அஞ்சலியும் காதல் திருமணம் செய்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆயிற்று. இது குறித்து நினைவுகூர்ந்த அவர் மாமியார் அன்னபெல், 1990களில் சச்சின் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் போல இருந்ததார். சக கிரிக்கெட் வீரர்கள் பிளே பாயாக இருந்ததால் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என அஞ்சியதாகவும் கூறினார்.
மேலும் எல்லோரும் நேசிக்கும் ஒருவர் என்பதிலும், குற்றமற்ற வாழ்க்கை வாழ்ந்து பலருக்கும் முன்மாதிரியாக திகழும் ஒருவருக்கு நான் மாமியார் ஆனேன் என்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.