கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் அவரது பொறுப்பு சிறப்பாக அமையவில்லை. இலங்கையில் ஒருநாள் தொடரை இழந்து, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சொந்த மண்ணில் கிளீன் ஸ்வீப் ஆன பிறகு, இப்போது பார்டர்-கவாஸ்கர் டிராபியிலாவது வெல்லுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. அணியின் மோசமான செயல்பாடு குறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கம்பீருக்கு செய் அல்லது செத்து மடி என விபரீதமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நீடிப்பாரா இல்லையா என்பதை இந்த தொடர் முடிவு செய்யும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், பிசிசிஐ டெஸ்ட் பயிற்சியாளர் பதவியை கம்பீரிடமிருந்து பறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோற்றால், டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனைப் போன்ற ஒரு நிபுணரை நியமிக்க பிசிசிஐ பரிசீலிக்கலாம். அதே நேரத்தில் கம்பீர் ஒரு நாள், டி-20 பயிற்சியாளராகவும் வாய்ப்புள்ளது.
இந்த மாற்றம் நடந்தால் கம்பீர் ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் ஆறு மணி நேரம் நீடித்த சந்திப்பில் கம்பீர் நேற்று பங்கேற்றார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி எப்போதும் சொந்த மண்ணில் வலுவாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், கம்பீர் தனது வியூகம் மற்றும் அணித் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் பாஜகவின் பெரும் தொண்டர் கவுதம் கம்பீர் என்பதால் இந்திய அணி தோற்றாலும் அவர் இந்த அணி பயிற்சியாளராக தொட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.