Homeசெய்திகள்இந்தியாகவரப்பேட்டை ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்; மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம்

கவரப்பேட்டை ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்; மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம்

-

- Advertisement -

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம். விட்டு விட்டு மிதமான மழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் சற்று தொய்வு.

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தடம் புரண்ட பெட்டிகளை நேற்று ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் மின்சார வயர் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னை நோக்கி முதல் ரயில் சென்றது.

இதனைத் தொடர்ந்து சென்னை மார்க்கத்தில் அடுத்தடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடைபெற்ற பகுதியை ரயில்கள் கடக்கும் சமயத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் என்ற அடிப்படையில் வேகத்தை குறைத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விபத்து நடைபெற்ற மறு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டவாள சீரமைப்பு மின் உயர் சீர் அமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் சிக்கி தடம் புரண்டுள்ள ரயில் இன்ஜினை ஜாக்கிகள் உதவியுடன் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக பாரம் கொண்ட ரயில் என்ஜின் தடம் புரண்டு ஜல்லிக் கற்களில் சிக்கி உள்ள நிலையில் அதனை தண்டவாளத்தில் நிலை நிறுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் கவரைப்பேட்டையில் மிதமான மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு வருகிறது. சென்னை செல்லும் மார்க்கத்தில் இரண்டு பாதையிலும் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னையிலிருந்து வரும் மறு மார்க்கத்தில் ரயில் இன்ஜினை நிலை நிறுத்திய பிறகு ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ