நாட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத அரசுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது என்று ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதமரால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை மட்டும் எப்படி தள்ளுபடி முடிகிறது என கேள்வி எழுப்பினார்.
மேலும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும் ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் நேரடி போட்டி உள்ளதாகவும் மற்ற சிறு கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் மூலம் இயக்கப்படும் ரிமோட் கண்ட்ரோல் கட்சிகள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் சிறு லாபம் மட்டுமே விவசாயிகளின் கைகளுக்கு கிடைக்கப்படுவதாகவும் பெரும் லாபம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.