Homeசெய்திகள்இந்தியாநிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை - பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

-

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை - பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாடு” என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது அவருடைய வறுத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

ஒரு வார்டுல கவுன்சிலருக்கு நிக்கணும்னு ஆசைப்படுறவர் கூட நாலு தெரு போய் சுத்திப் பார்ப்பாரு. ஏரியா பசங்களுக்கு மைதானத்தை சுத்தம் பண்ணி தருவாரு. கபடி போட்டிக்கு பனியன் ஸ்பான்சர் பண்ணுவாரு.

தொகுதில எம்.எல்.ஏ தேர்தல்ல நிக்கணும்னு ஆசைப்படுறவரு ஊருல நாலு முக்கியப் புள்ளிகளைப் பாப்பாரு. எல்லாதரப்பு பிரதிநிதிகளிடமும் பேசுவாரு. நாலு வணிகர் சங்கங்களை போய் சந்திப்பாரு. என்ன கோரிக்கை என்ன செய்ய முடியும்னு சொல்லுவாரு. கோயில் திருவிழாவுக்கு ஏதாவது உதவி செய்வாரு, தொகுதில கல்யாணம், காதுகுத்துக்கு மொத ஆளா வந்து நிப்பாரு.

ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆனா தன்னோட கட்சிய வளர்க்கணும்னு நினைக்கிற ஒரு மாநிலத்தோட எந்த வாழ்வாதார கோரிக்கையும் காதுல வாங்காம, ஏற்கனவே கொடுத்துட்டு இருந்ததையும் மொத்தமா நிறுத்திட்டு, பட்ஜெட்ல தமிழ், தமிழ்நாடுன்னு ஒரு வார்த்தை கூட இல்லாம முழு பட்ஜெட்டையும் தாக்கல்செய்ய முடியுது.

ஏன்யா நாங்க குடுத்த வரிவருவாய்ல, மூணுல ஒரு பங்கு காசை கூட திருப்பித் தர மாட்றீங்கன்னு’ கேட்டா, “ஆமாடா; உங்களுக்கு தரமுடியாது”ன்னு சொல்லிட்டு பாஜகவால தமிழ்நாட்ல எப்படி ஓட்டுக் கேக்க முடியுதுன்னு வேதனையுடன் கூறினார்.

MUST READ