Homeசெய்திகள்இந்தியாபாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

-

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 170 நாடுகளை சே ர்ந்த 4,400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 18-வது இடத்தை பிடித்து அசத்தியது. டோக்கியோ பாராலிம்பிக் தொ டரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், நடப்பு தொடரில் 29 பதக்கங்களை கைப்பறறி வரலாறு படைத்தது.

para olympics

இந்த நிலையில், பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5
லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ