Homeசெய்திகள்இந்தியாரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி....!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!

ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!

-

 

ராகுல் காந்திமக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் பரபரப்புடன் தயாராகி வருகின்றன. கடந்த வாரம் பா.ஜ.க கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஆயத்தப் பணிகளை தொடங்கியது.

இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்காக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தொகுதிய்ல் சசி தரூர் மற்றும் ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்னம்த்லோன் தொகுதியில் பூபேஸ் பேகல், கர்நாடகாவின் மாண்டியாவில் வெங்கட்ராம கவுடாவும், பெங்களூரு ஊரகப் பகுதியில் டி.கே.சுரேஷ் குமார் போட்டியிடுகின்றனர். முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முதல் 30 தொகுதிகளுக்கான விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக பா.ஜ.க-வின் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரிலும் போட்டியிடுகின்றனர். முன்னதாக மோடி தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஏற்கனவே 2 முறை வெற்றிப் பெற்ற வாரணாசி தொகுதியிலேயே மோடி போட்டியிடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் படுதோல்வி அடைந்தார். அதன்காரணமாக இம்முறை நடக்கும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ