Homeசெய்திகள்இந்தியாரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

-

அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது முடியும் என காத்து கொண்டிருந்தனர். தற்போது தேர்தல் முடிந்ததும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்த தொடங்கியுள்ளது.

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்  அந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை 12-15% உயர்த்திய நிலையில், இன்று ஏர்டெல்லும் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் கட்டண விலை உயர்வு விவரம்:

அதன்படி, ரூ.179 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.199 ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455 ஆக இருந்த கட்டணம் ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1GB ரூ.265 பிளான் ரூ.299 ஆகவும், 1.5GB  ரூ.479 பிளான் ரூ.579 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

2 GB டேட்டா உடன் 28 நாளுக்கான ஏர்டெல் கட்டணம் ரூ.179இல் இருந்து ரூ.199 ஆகவும், 6GB டேட்டா உடன் 84 நாளுக்கான கட்டணம் ரூ.455இல் இருந்து ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான் (apcnewstamil.com)

தினசரி 1.5GB டேட்டா உடன் 28 நாளுக்கான கட்டணம் ரூ.299இல் இருந்து ரூ.349 ஆகவும், 1.5GB டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ரூ.479இல் இருந்து, ரூ.579 ஆகவும், 2GB டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ரூ.2999இல் இருந்து ரூ.3,599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

MUST READ