வக்ஃபு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி என திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு விமர்சித்துள்ளார்.
டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் மற்ற மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று பி.ஆர்.நாயுடு தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி, “24 உறுப்பினர்கள் கொண்ட திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஒரு இந்து அல்லாதோர் கூட இல்லை. அதன் புதிய தலைவர், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆனால் வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாத நபர்கள் இருக்க வேண்டும் என மோடி அரசு விரும்புகிறது” என்று கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பி.ஆர்.நாயுடு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “வக்ஃபு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. ஒவைசி போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி அதனை எப்படி தேவஸ்தானத்துடன் ஒப்பிடலாம்? அவரது இந்த கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாற முடியாது: மோடிக்கு கடும் எச்சரிக்கை