Homeசெய்திகள்இந்தியாவிபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே - வெங்கடேசன் எம்.பி

விபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே – வெங்கடேசன் எம்.பி

-

- Advertisement -

ஒவ்வொரு ரயில் விபத்தின் போதும் வெறும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகிறது. தீர்வுகளை நோக்கி ரயில்வே துறை எப்போது செல்லப்போகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நேற்று இரவு ரயில் விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்து எப்படி நடந்தது? ஏதாவது சதித்திட்டமா என்ற கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ரயில் போக்குவரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே .

ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?

உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? என்று வெளியிட்டுள்ளார்.

MUST READ