Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் கனமழை : 11 பேர் உயிரிழப்பு.. மேலும் 2 நாட்களுக்கு அரஞ்சு அலெர்ட்..

டெல்லியில் கனமழை : 11 பேர் உயிரிழப்பு.. மேலும் 2 நாட்களுக்கு அரஞ்சு அலெர்ட்..

-

டெல்லி மழை

டெல்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 

டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் தலைநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்ததோடு பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், கார் ஓட்டுநர் ரமேஷ் குமார் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

டெல்லி மழை

இதனைத்தொடர்ந்து வசந்த் விகாரில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் டெல்லி மாவட்ட பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களில் சந்தோஷ்குமார் யாதவ், (19) சந்தோஷ் ( 38 ) ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், 3வது தொழிலாளர் பெயர், அடையாளம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ரோகினி பிரேம் நகரில் 39 வயதுடைய நபர் மின்சாரம் தாக்கியும், புதிய உஸ்மான் பூரில்,சாலிமார் பாக்கில் 3 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் என மழை பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் எனவும், இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ