Homeசெய்திகள்இந்தியாசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

-

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லி,சீரடி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னை-சீரடி விமானம் 1, சென்னை-ஹைதராபாத் விமானம் 1, ஆகிய 6 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் டெல்லி-சென்னை 4 விமானங்கள்,சீரடி-சென்னை விமானம் 1, ஹைதராபாத்-சென்னை விமானம் 1, ஆகிய 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க!

இந்த விமானங்கள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவ்வாறு முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல், இதைபோல் விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

MUST READ