Homeசெய்திகள்இந்தியாதொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டம்

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டம்

-

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக கர்நாடக அரசு உயர்த்த உள்ள நிலையில் இதற்கு தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் விளங்கி வருகின்றன. ஐ.டி.துறையில் பணியாற்றுவோருக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை, அண்மையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், 14 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தினால், அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இது மனிதநேயமில்லாத செயல் எனவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலுல் இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சங்கத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனேவே கூடுதல் வேலை நேரத்தால், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வரும் ஊழியர்களுக்கு, 14 மணி நேர வேலை என்பது, மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். கர்நாடக அரசின் முடிவால், 20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சட்டத்திருத்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

MUST READ