நாடாளுமன்ற எம்.பி.க்கள் 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவைக்குள் இருவர் நுழைந்து முழக்கங்களை எழுப்பியது சர்ச்சையானது. பாதுகாப்புக் குறைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பிய மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த 146 எம்.பி.க்கள் அந்த கூட்டத்தொடரில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 14 எம்.பி.க்கள் விவகாரம் அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
தள்ளிப் போகிறதா ‘புஷ்பா 2’ ரிலீஸ்?
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், எம்.பி.க்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.