நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
அதே சமயம், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக, கடந்த அக்டோபர் மாதம் 08- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!
நாடு முழுவதும் 19 ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.