Homeசெய்திகள்இந்தியா"ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை"- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை"- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
Photo: SBI

ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், அதற்கான விண்ணப்பப் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

பாரத ஸ்டேட் வங்கி இன்று (மே 21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பொதுமக்கள் எந்த படிவத்தையோ, அடையாள ஆவணமோ தர வேண்டியதில்லை. ஒரே சமயத்தில் ரூபாய் 20,000 மதிப்புள்ள ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!

இது தொடர்பான கடிதத்தை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியா முழுவதும் உள்ள தனது வங்கிக் கிளைகளுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ