
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
“மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்”- பிரதமர் நரேந்திர மோடி உரை!
அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முத்ரா யோஜனா திட்டம் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தின் கீழ் நமது வீரர்களுக்கு ரூபாய் 70,000 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளை மேம்படுத்துவதற்கான கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 4 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 12.5 லட்சம் பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்; அதற்கு நான் உறுதியளிக்கிறேன். சுமார் ரூபாய் 15,000 கோடி மதிப்பில் ‘விஸ்வகர்மா யோஜனா திட்டம்’ அடுத்த மாதம் செயல்படுத்தப்படும். பாரம்பரிய திறமைகள் கொண்ட நபர்களுக்கு உதவி விஸ்வகர்மா யோஜனா திட்டம் கொண்ட வரப்படுகிறது. இந்தியாவில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அடிக்கல் நாட்டுவது, அறிவிப்போடு நின்றுவிடாமல் திட்டத்தை செயல்படுத்துகிறோம். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம்.
நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைப் பெற 2030- ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முன் கூட்டியே எட்டப்பட்டது. நக்சல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் முழுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஜனநாயகங்களுக்கும் இந்தியா தான் தாய். இந்தியாவின் கட்டமைப்பு மேம்பாட்டில் பெண்கள் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கின்றனர். 2047- ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம்.
“சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்”- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் இந்தியா தான். இஸ்ரோ தொடங்கி, ஜி20 நாடுகளின் மாநாடு வரை பல்வேறு நிகழ்வுகளில் முக்கிய பங்கு பெண்களுக்கு உள்ளது. நாட்டில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்துப் போராடுவேன். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
வாரிசு அரசியல் இல்லாத, ஊழல் இல்லாத, கொள்கைகளில் சமரசம் இல்லாத இந்தியாவே எனது கொள்கை. எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்கானது. குடும்பத்திற்காக மட்டும், குடும்பத்திற்கே அனைத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கொள்கை” எனக் கூறியுள்ளார்.