இணையம் மூலம் அதிகம் வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணி இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, 2 விநாடிக்கு 5 பிரியாணி ஸ்விக்கி மூலம் வாங்கப்பட்டுள்ளது. 20.49 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் முதல் ஆர்டராக பிரியாணியை வாங்கியுள்ளனர். ஸ்விக்கியில் ஜனவரி 1- ஆம் தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணி வாங்கப்பட்டுள்ளது.
அதிக ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவாக 8-வது முறையாக 2023-ம் ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது 188 லட்சம் பீட்சாக்கள் வாங்கப்பட்டுள்ளன. துர்கா பூஜையின் போது, குலாப் ஜாமூன் மற்றும் ரசகுல்லா மட்டும் 77 லட்சம் ஆர்டர்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளனர்.
லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!
மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூபாய் 42.30 லட்சத்திற்கு இணையம் மூலம் உணவு வாங்கியுள்ளார்.