நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ல் நடக்கிறது
நீட், ஜேஇஇ, சியூஇடி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜே.இ.இ முதல் தேர்வு 24.01.2024 – 01.02.2024 வரையும், ஜே.இ.இ 2ம் தேர்வு 01.04.2024 – 15.04.2024 வரையும், பல்கலைக்கழகங்களுக்கான இளநிலை நுழைவுத் தேர்வான CUET தேர்வு 15.05.2024 – 31.05.2024 வரையும் நடைபெற உள்ளது.
ஜூன் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.