பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மாணவி சுட்டுக்கொலை
உத்திரப்பிரதேசத்தின் ஜலான் பகுதியில் மிகவும் வேதனையான சம்பவம் நடந்துள்ளது.
ரோஷ்னி அஹிர்வார் என்ற 22 வயதான தலித் மாணவியை 17.4.23 அன்று பட்டப் பகலில் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவியான இவர், கல்லூரி முடிந்து தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இரண்டு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மாணவி கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் முன்னாள் எம்.எல்.ஏ. அஷ்ரப் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் இருந்த நிலையில் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.