Homeசெய்திகள்இந்தியா'மக்களவைத் தேர்தல் 2024'- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

‘மக்களவைத் தேர்தல் 2024’- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

-

- Advertisement -

 

'மக்களவைத் தேர்தல் 2024'- காலை 11.00 மணி நிலவரம்....தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களின் 88 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியுள்ளது.

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14- ல் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் 12, மகாராஷ்டிராவில் 8, உத்தரப்பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 7, மேற்கு வங்கம் 3, அசாம் 4, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர் திரிபுராவில் தலா 1 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மறைவால் மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, தேஜஸ்வி சூர்யா, டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கர்நாடகாவில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

'மக்களவைத் தேர்தல் 2024'- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

அதேபோல், வயநாட்டில் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்தில் சசிதரூர், ஆலப்புழையில் கே.சி.வேணுகோபால், திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் நடிகை ஹேமமாலினி களம் காண்கிறார்.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

MUST READ