Homeசெய்திகள்இந்தியாஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!

ஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!

-

 

ஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PMO

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கவுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். நேற்று (செப்.08) மட்டுமே மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

நேற்று (செப்.08) இரவு டெல்லி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உடனான பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்புக்கும் இடையே துறைமுகங்களை பயன்படுத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், இரு தரப்பு வர்த்தகத்தையும், இந்திய ரூபாயிலேயே மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுதவிர இந்தியா, வங்கதேசம் இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!

உச்சி மாநாட்டின் இடையே பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர் என சுமார் 15 நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

MUST READ