R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3% சலுகை வழங்கப்படுகிறது.
ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (Automatic Ticket Vending Machine) மூலம் UTS டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு முன்பு, R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
இந்த புதிய வசதி, அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை UTS மொபைல் செயலியில் உள்ள R-வாலெட் அல்லது ATVM மூலம் வாங்கும் ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் விதமாக, UTS மொபைல் ஆப்பை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
பாஜக- காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏன் அம்பேத்கர் தேவைப்படுகிறார்..? தலித் வாக்கு வங்கியை உடைக்கும் அபாயம்