Homeசெய்திகள்இந்தியாவெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!

வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!

-

- Advertisement -

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வென்ற மூன்று மாநிலங்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி நீடித்து வருகிறது.

மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுவரை இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் யார் என்பதை அக்கட்சித் தலைமை அறிவிக்கவில்லை. மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 12 பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மூன்று மாநிலங்களில் புது முகங்களைக் கொண்டு வருவது குறித்து, கட்சி தலைமை பரிசீலித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!

இருப்பினும், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கரில் ராமன் சிங் ஆகியோர் மீண்டும் முதலமைச்சர்களாக வருவதற்கான சாத்திய கூறுகள் இன்னும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

MUST READ