மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
114 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’நிகழ்வு நடப்பாண்டு உத்தரபிரதேச மாநிலம் பிரயாப்ராஜில் அதாவது அலகாபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா என்பது பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுகிறது. இந்த கும்பமேளாவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்துள்ளார்கள் என்பது சிறப்பு. தினசரி லட்சக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவில் பங்கு பெற பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் இங்கு வருகிறார்கள். கும்பமேளாவில் இன்று சிறப்பு நாளாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால்
இன்று மௌனி அமாவாசை, தமிழில் நாம் தை அமாவாசை என்று கூறுவவோம். சிறப்பான நாளான இன்று வழக்கத்தை விட அதிமான பக்தர்கள், மக்கள் இங்கு புனின நீராட வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மக்கள் வந்திருக்கிறார்கள். மக்கள் நேற்றிலிருந்து அதிகமாக வர தொடங்கி விட்டார்கள். இதற்கு காரணம் இன்று வந்தால் கும்பமேளவில் கலந்து கொள்ள முடியாது போக்குவரத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் நேற்றே லட்ச கணக்கில் மக்கள் வந்து விட்டார்கள். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் கும்பளோ நடக்கும் அலகபாத் அதாவது பிரயாக்ராஜ் பகுதியில் 8 கோடிக்கும் மேற்பட்டோர் வந்து குவிந்துள்ளனர்.
அளவுக்கு அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் இங்கு வந்துள்ளதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கும்பமேளா நடக்கும் இடத்திற்கு செல்லும் அலகாபாத் சாலைகள் மற்றும் கும்பமேளா நடக்கும் ஆற்றின் கரையிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள். தள்ளுமுள்ளு ஏற்பட்டது மட்டுமில்லாமல் மக்கள் எங்குமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எங்குமே செல்ல முடியாமல் போய்விட்டதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தார்கள். ஒருவர் மீது ஏராளமானோர் விழுந்ததால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8 மணி வரை உள்ள தகவலில் படி பார்த்தால் இங்குள்ள எஸ்.ஆர்.என் மருத்துவனையில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மருத்துவமனை நிர்வாகம் அல்லது உத்தரப்பிரதேச அரசால் தெரிவிக்கப்படாத சூழலில், உயிரிழப்பின் எண்ணிக்கை 50-ஐ கடக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட சங்க மூக்குத்தி பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையை தடை விதித்துள்ள நிலையில், கங்கையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பக்தர்கள் புனித நீராடிக் கொள்ளலாம் எனவும் சங்க மூக்குத்தி பகுதிக்கு ஒரே நேரத்தில் அனைவரும் செல்ல வேண்டாம் என உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் இடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், பாதுகாப்பு பக்தர்களின் வசதி உள்ளிட்டவற்றில் சமரசம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உத்திரபிரதேசம் மாநில முதலமைச்சர் இடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், கூடுதல் பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவ படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மகா கும்பமேளா நிகழ்வு நிறைவடைய இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், பாதுகாப்பு கட்டமைப்புகளை மறுத்திட்டமிட உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசலில் பலி..! சங்கமத்திற்கு வரவேண்டாம்… பக்தர்களுக்கு வேண்டுகோள்..!