Homeசெய்திகள்இந்தியா3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

-

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

மத்தியப் பிரதேசத்தில்  சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்தக் சட்டப்பேரவைக் கூட்டத்தில், பல விஷயங்களில் காங்கிரஸுக்கும் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.

நேற்று மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலா பச்சன், மத்தியப் பிரதேசத்தில் காணமல் போன பெண்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த மத்தியப்பிரதேச பா.ஜ.க அரசு, “மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021 – 2024) 28,857 பெண்கள், 2,944 சிறுமிகள் என மொத்தம் 31,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர்”.

ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் காணாமல் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரம், 724 வழக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உஜ்ஜயினியில் 676 பெண்கள் காணாமல்போன நிலையில், ஒரு வழக்கு கூட இன்று வரை பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியை தருகிறது.

MUST READ