இந்தியாவில் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் (2024) 7 கட்டங்களாக சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 293 இடங்களையும், காங்கிரஸ் 232 இடங்களையும் மற்றவை 18 இடங்களையும் பெற்றுள்ளன. பாஜகவை விட காங்கிரஸ் கட்சியானது 61 இடங்கள் பின் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதம் கொடுத்தார். மேலும் 17-வது லோக்சபாவை கலைக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையையும் ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 8 ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, 17வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில், அதற்கான தீர்மானத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்தார்