திருப்பதி திருமலை மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தைப் பிடிப்பட்டது. இத்துடன், கடந்த 60 நாட்களில் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக ஏழுமலையானை தரிசிக்க அலிபிரியில் இருந்து நடைப்பாதையாக செல்லும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 4 வயது சிறுவனை சிறுத்தைக் கவ்விச் சென்றது.
நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!
இதைக் கண்ட பக்தர்கள், கூச்சலிடவே சிறுவனை விட்டுச் சென்றது. தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் சிறுத்தை ஒன்று பிடிப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெல்லூரைச் சேர்ந்த தினேஷ் என்பவரது ஆறு வயது மகளை சிறுத்தைக் கொன்றது. எனவே, ஆப்ரேஷன் சிறுத்தை என்ற பெயரில் தேவஸ்தானம் சார்பில் வனத்துறையினர், இரவிலும் ஒளிரும் கண்காணிப்புக் கேமராக்களையும், 30 இடங்களிலும் கூண்டுகளையும் வைத்தனர்.
கேரளாவில் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை!
இந்த நிலையில், ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் பிடிப்பட்ட நிலையில், நேற்று இரவு ஏழு மையில் பகுதியில் நான்காவது சிறுத்தை சிக்கியுள்ளது.