Homeசெய்திகள்இந்தியாதீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு

-

டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாக உள்ளது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலைகளின் தாக்கத்தால் 192 பேர் இறந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்புகடந்த 2 நாட்களில் மட்டும் வெப்ப வாதத்தினால் 50 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தொிவித்துள்ளது.

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்புடெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் வெப்ப அலை வீசி வருகிறது. கோடை காலத்தில் நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெப்ப பாரத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்குமாறு மருத்துவமனைகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்புவெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு தயாராக உள்ளன என்பது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவை இன்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ