ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL சிம்மிற்கு மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி சேவை அளித்துவரும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 5G சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அறிவித்ததை அடுத்து கலக்கத்தில் உள்ளன.
டெல்லி, பெங்களூரு , ஹைதராபாத், சென்னை போன்ற பெரிய நகரங்களில் 5ஜி சேவை சோதனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 5G பரிசோதனையை மேற்கொள்ள, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லேகா வயர்லெஸ் மற்றும் அமந்தியா டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல முக்கிய இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளை பெறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் அதன் 5G சேவைகளை தொடங்க பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, தனியார் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகும் ‘தேவரா’ பட இரண்டாவது பாடல்…… அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியீடு!
BSNL நிறுவனத்தில் டாடாவின் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு்ள்ளது.டாடா நிறுவனம் இப்போது பிஎஸ்என்எல் உடன் இணைந்து, தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் வலுவாக தனது காலகள் பதிக்க திட்டமிட்டு வருகிறது. அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை, தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் மேம்படுத்த டாடா நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.