லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரிக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கார் நல்லஜர்லா மண்டலம் அனந்தப்பள்ளி அருகே இன்று காலை சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்று லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 வயது குழந்தை இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களை நல்லஜர்லா மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.