Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் நேற்று இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. சீனிவாசம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். டோக்கன் விநியோகம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள 2 மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ