Homeசெய்திகள்இந்தியாதமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வைஷ்ணவ்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்

-

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வைஷ்ணவ்மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான ரயில்வே திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் 77 ரயில் நிலையங்கள் அம்ரிம் ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், 687 பாலங்கள், சுரங்க பாதைகள் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

879 கோடி மட்டுமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் தற்போது அது 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

MUST READ