
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் ஒடிஷா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!
77 வயதான பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிஷா மாநில முதலமைச்சருமான நவீன் பட்நாயக், தொடர்ச்சியாக 6-வது முறையாக அரியணையில் அமர காய்நகர்த்தல்களைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஜெய் ஜெகந்நாத் என்ற முழக்கத்தையும் முன் வைத்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தில் ஜெகந்நாதர் வழிபாடு பிரதானமாக இருந்து வரும் நிலையில், இந்த முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் மேம்படுத்தப்பட்ட வளாகத்தையும் கடந்த வாரம் புதன்கிழமை அவர் தொடங்கி வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய கோயிலுக்கு தினசரி 10,000 பேரை அழைத்து வந்து, தரிசனம் செய்ய வைக்கவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளார். எனினும், ஜெகந்நாதரை முன் வைத்து நவீன் பட்நாயக் அரசியல் செய்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
திரிஷா, நயன்தாரா வழியில் அதிதி சங்கர்…. வெளியான புதிய தகவல்!
ஜெகந்நாதன் கோயில் மட்டுமில்லாமல் ஒடிஷாவில் 10,000 முக்கிய கோயில்களை நிர்மாணம் செய்யவும், நவீன் பட்நாயக் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் அரசியல் களத்தில் 23 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை வீழ்த்தி ஆட்சியமைக்க பா.ஜ.க., தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் பா.ஜ.க.வை சமாளிக்க அவர்கள் பயன்படுத்தும், அதே ஆயுதத்தையே முதலமைச்சர் நவீன் பட்நாயக் கையில் எடுத்துள்ளார்.