Homeசெய்திகள்இந்தியாமரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

-

- Advertisement -

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் காரில்  சென்றுள்ளனர். இவர்களில் 4 பேர் சிறுவர்கள் ஆவர்.  இந்த கார் மெதக் மாவட்டம் சிவம்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி ஏறியதில் நிலைத்தடுமாறியதில்,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. அத்துடன் மரத்தில் மோதிய வேகத்தில் அருகில் இருந்த ஏரிக்கால்வாயில் நான்கு முறை கார் பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் காரில் பயணித்த சாந்தி (38), அம்மு (12), சீதாராம் தாண்டாவை சேர்ந்த அனிதா ( 3 ),  இந்து ( 35 ),  ஷ்ரவாணி ( 13 ) தலபள்ளி தாண்டாவைச் சேர்ந்த  சிவராம் ( 12), துர்கி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன்னதாக  இறந்தவர்களின் உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

MUST READ