Homeசெய்திகள்இந்தியா6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

-

- Advertisement -

பெங்களூரு நகரில் குழந்தை கடத்தலின் போது கைது செய்யப்பட்ட கும்பல் இதுவரை 6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்பனை விற்பனை செய்துள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பச்சிளம் குழந்தையை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்த கடத்தல் கும்பல் சிக்கியது. 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த கும்பல் பச்சிளம் குழந்தைகளை கொண்டு வந்து பெங்களூருவில் குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

இதுதொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் 3 பேர் சிக்கினர். மருத்துவமனை நடத்தி வரும் கெவின், ரம்யா மற்றும் முருகேஸ்வரி  ஆகியோரை கைது செய்தனர். இதில் கெவின் போலி டாக்டர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐவிஎஃப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக குழந்தையில்லா தம்பதியர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. 6 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், 50 முதல் 60 குழந்தைகள் வரை கர்நாடகாவிலும், மீதம் தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், 10 குழந்தைகள் விற்பனை தொடர்பான விவரங்கள் மட்டுமே காவல்துறைக்கு கிடைத்துள்ளன. மற்ற குழந்தைகளின் விவரங்களை கண்டறியும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ