75- வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.
பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண் தலைநசுங்கி பலி – ஓட்டுநர் கைது!
டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசுத் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டுள்ளார். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், முன்னாள் பிரதமர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
75- வது குடியரசுத் தினத்தையொட்டி, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். 112 பெண்கள் கொண்ட இசைக் குழுவினர் வாத்தியங்களை இசைத்தபடி அணி வகுப்பைத் தொடங்கினர்.
ஆவடியில் மாரடைப்பால் இளம் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு
விமானப்படைக்கு சொந்தமான MI-17 ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. குடியரசுத் தின விழாவையொட்டி, டெல்லியில் காவல்துறையினர், துணை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.