Homeசெய்திகள்இந்தியாஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

-

- Advertisement -

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை விளையாட விட்டுவிட்டு வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அங்கு வெட்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக விதமாக குழந்தை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.தகவல் அறிந்து  விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்  ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க களத்தில் இறங்கினர்.

 

40 அடி ஆழ்துளை கிணற்றிகு அருகே முதலில் பொக்லைன் உதவியுடன் பக்கவாட்டில் பள்ளம் தோண்டியவர்கள் படிப்படியாக மீட்புபணியை மேற்கொண்டனர்.குழந்தை சுவாசிக்க ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது.சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டனர்.ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்டு ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறினார்கள் என தேசிய பேரிடர்  குழுவினர் தெரிவித்தனர்.இந்த 5 மணிநேர போரட்டத்தில் ஈடுபட்டு குழந்தையை உயிருடன் மீட்டுக் கொடுத்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

MUST READ