பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக நடிகை தமன்னா பாட்டியா குறித்த பாடத்தை அறிமுகப்படுத்தி பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமன்னா பாட்டியா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார் மற்றும் ஹிட் பாடல்களிலும் நடித்துள்ளார். பாடத்திட்டத்தில் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழிப் பள்ளிகளின் (KAMS) அசோசியேட்டட் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல் (apcnewstamil.com)
இது குறித்து சங்கச் செயலர் சசிகுமார் கூறுகையில், இப்பிரச்சனை தொடர்பாக முதன்மைக் கல்வித் துறையிடம் புகார் செய்வதாக உறுதியளித்தார்.