Homeசெய்திகள்இந்தியாதாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும்  - டி.ஆர். பாலு வர்ணனை

தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும்  – டி.ஆர். பாலு வர்ணனை

-

தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும்  - டி.ஆர். பாலு வர்ணனை

நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா  மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகரை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாகவே தேர்வு செய்து வருவது மரபு. அதே மரபு இந்த முறையும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிராகரிக்ப்பட்டது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி சபாநாயகர் வேட்பாளராக அறிவித்தது.

இதையடுத்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. மக்களவைக் கூடியதும் பிரதமர் மோடி சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா பெயரை முன்மொழிந்து தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் அதனை வழிமொழிந்தனர்.

ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2000 வருமானம் – மோசடி கும்பல் கைது

அதேபோல எதிர்க்கட்சிகளின் சபாநாயகர் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை இந்தியா கூட்டணி எம்பிக்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதை அடுத்து பிரதமர் மோடி முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் தெரிவித்தார்.

இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் 18-வது மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அடுத்து அனைத்து கட்சி மக்களவை பிரதிநிதிகளும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு வாழ்த்து தெரிவித்து ”நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வென்றிருக்கலாம். தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும். ஆனால் ஒருபோதும் தன் மீது தண்ணீரை ஒட்ட தாமரை அனுமதிக்காது. அதுவே இயற்கை. அதுபோல நீங்கள் பாஜக நண்பர்களால் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இனி உங்களுக்கும் இந்த அவைக்கும் இடையே எந்த அரசியலும் இல்லை. இனி எந்த நிறமும் இல்லை. எதிர்க்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ அனைவரையும் ஒரே நிலையில் நடத்தவேண்டும். எனவே, நான் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் பாரபட்சமின்றி செயல்படுங்கள்… பாரபட்சமின்றி செயல்படுங்கள்” என தெரிவித்தார்.

MUST READ