ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா மற்றும் மனோஜ் ( 9), ரிஷி ( 7) ஆகியோருடன் விசாகப்பட்டினம் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு இன்று அதிகாலை காரில் வந்து கொண்டிருந்தனர். கணவர் விஜய் குமார் ரவுலபாலம் மண்டல் இடக்கோட்டா வரை காரை ஓட்டி வந்த நிலையில் அதன் பிறகு அவரது மனைவி உமா காரை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் பி.கன்னாவரம், சிந்தவாரிப்பேட்டை அருகே அதிகாலை 3 மணியளவில் இவர்கள் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் விஜயகுமார், உமா கரைக்கு வந்தாலும் பிள்ளைகளை காப்பாற்ற மனோஜை காப்பாற்ற விஜயகுமார் முயன்றும் உமா, இளைய மகன் ரிஷியை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் விஜயகுமார் தவீர மற்ற மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்த எஸ்.ஐ. சிவகிருஷ்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து… 7 பேர் பலி, 49 பேர் காயம்… விபத்துக்கு யார் பொறுப்பு?