Homeசெய்திகள்இந்தியாஇலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

-

இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து போதை பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டைகள் உள்ளிட்டவைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இலங்கையில் இருந்து உச்சிப்புளி அருகே உள்ள களிமண்குண்டு கடற்கரை பகுதிக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்று சுங்கத்துறை அதிகாரிகள் 15 கிலோ தங்கத்தையும்  இது தொடர்புடைய மண்டபம் பகுதியைச்சேர்நத சல்மான் கான் என்ற இளைஞரை கைது செய்து இராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இதே பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பல கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடத்தல் காரர்கள் இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சுங்கதுறை அதிகாரிகளில் பார்த்தவுடன் நடுக்கடலில் போட்டுவிட்டு தப்பி சென்று விடுகின்றனர் அப்படி தப்பி செல்லும் இருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் தப்பி வந்த படகை கரையினில் விட்டது தொடர்ந்து அதை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து இருவரையும் கைது செய்த பொழுது அவர்கள் தங்கம் நடுக்கடலில் வீசப்பட்ட  இடத்தை சொன்னவுடன் அதிகாரிகள் இரண்டு நாட்கள் நடுக்கடலில் தேடிய பின்பு அங்கு சுமார் 25 கிலோ தங்க கட்டிகள் இருந்ததை கைப்பற்றி அந்த தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி மேலும் இருவரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர் இந்நிலையிலும் தொடர்ந்து இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரும் சம்பவம் ஒரு வாடிக்கையாக உள்ளது. இதனை  மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரியிடம் சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மண்டபத்தைச் சேர்ந்த சல்மான் ஒரு டீக்கடை தொழிலாளி அவர் தங்கம் கடத்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் இராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தங்கத்தை கடத்தி வந்த சல்மானை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து 15 (8 கோடி சர்வதேச மதிப்பு இருக்கும் என தோராய மதிப்பு)   கிலோ தங்கத்தை கைப்பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இதன் தகவல்களை இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் விபரங்களை தருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

MUST READ