Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!

-

“தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது”-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி வில்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்

வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக  ஹிந்தியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. திமுக சார்பில் , குறுகிய நேர விவாதம் அல்லாமல் மக்களின் பிரச்சினைக்காக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் , இந்த கூட்டத்தொடரில் மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு குறிக்கோளாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை  அரசியல் சாசன அமர்வுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் ஆளுநர்கள் செயல்படுவதை சுட்டிக்காட்டினோம்.

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்

ஆளுநர்களின் இது போன்ற செயல்களால் மக்களிடம் நலத்திட்டங்கள்  சென்றடைவதில்லை. ஆளுநர்கள் இது போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதை விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.விவசாயிகள் பிரச்சனை , வேலைவாய்ப்பு ,சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை பற்றியும் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல மத்திய அரசு பட்டியல் இட்டுள்ள மசோதாக்களில் மூன்று மசோதாக்கள் பெயர் மாற்றம் தொடர்பான மசோதா அனைத்தும் ஹிந்தியில் உள்ளது, இந்தியா முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தும் ஹிந்தியில் பெயர் மாற்றம் தொடர்பான இந்த மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசின் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மட்டுமல்லாமல் மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்.

ஆர்டிகள் 348-ன்படி ஒரு மசோதாவை கொண்டு வரும்பொழுது அது ஹிந்தியில் இருக்கக் கூடாது. இதன்  மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் இந்தியாவில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. உரிய ஆலோசனை பெற்ற பிறகு இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும். இதைத் தவிர மீனவர்கள் விவகாரம் , சென்னை உயர்நீதிமன்ற பெயர் மாற்றம் உள்ளிட்டு விவாகரங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டது. கூட்டத்தொடரை மக்கள் நலனுக்காக நடத்த தயாராக இருக்கும் மத்திய அரசு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

மேலும் இந்தியா சீனா எல்லை விவகாரம், பாலஸ்தீன் விவகாரம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் கூட அவர் பேசுவதில்லை என்பதை  எதிர்க்கட்சிகள் சார்பாக குறிப்பிடப்பட்டது மற்றும்  பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் விவகாரத்தில் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவதை எதிர்க்கட்சிகளின்  ஒருமித்த கருத்தை தெரிவித்தோம் என கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்

இடைத்தரகர்கள் வைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள்  மிரட்டப்படுவதாக அப்பாவு தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வில்சன், ஒரு மாநிலத்தில் குற்றம் நடந்தால் அதனை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இதுபோன்று இடைத்தரகர்கள் மூலம் மிரட்டப்படுபவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம்  புகார் அளிக்கலாம். இதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

MUST READ