விசாகப்பட்டினத்தில் அதிவேகமாக வந்து பிரேக் பிடிக்காத மணல் லாரி ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்தவர் மீது மோதி விபத்து ஒருவர் பலி பெண் மயிரிழையில் தப்பினார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜவாக சுந்தரய்யா காலனியில் தெருமுனையில் ஜெராக்ஸ் கடை உள்ளது. இங்கு ஜெராக்ஸ் எடுக்க விசாகாப்பட்டினம் உருக்காலையில் பணி புரியும் பி.வி.ரமணா 58 வந்தார். அப்போது கடை உரிமையாளர் கடை அருகே உள்ளே அவரது வீட்டிற்கு சென்று கொண்டுருந்தார்.
மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மணல் ஏற்றி கொண்டு அதிவேகமாக வந்த லாரி தெரு முனையில் திரும்ப முற்பட்டபோது, லாரியின் பிரேக் பழுதாகியதால் அப்பகுதி செங்குத்தானதால் எதிரே இருந்த ஜெராக்ஸ் கடை மீது நேரடியாக சென்று லாரி மோதியது. இதில் ஜெராக்ஸ் எடுக்க வந்த உருக்காலை ஊழியர் பி.வி.ரமணா அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.
கடையின் முன் நின்றிருந்த மற்றொரு பெண் வேகமாக வந்த லாரியை பார்த்த அவர் ஓரமாக ஒதுங்கியயால் மயிரிழையில் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த கஜுவாக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டு லாரியை பின்னுக்கு இழுத்து ரமணா சடலத்தை மீட்டனர். இந்த விபத்தில் ஜெராக்ஸ் கடை முற்றிலும் சேதமடைந்தது. விபத்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது .