ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் எப்போது வேண்டுமானாலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. சிலர் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள் மேலும் சிலருக்கு முக அமைப்புகள் மாறி இருக்கும். இவற்றை தவிர்க்கவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் வலியுறுத்திக் வருகிறது.
இதற்காக 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகை ஆகியாவற்றை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் ஆதாரை புதுப்பிக்க வருகிற 14-ஆம் தேதி வரை தான் கால அவகாசம் உள்ளது என்று வதந்தி பரவி வருகிறது. இதனால் இ சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் ஆதாரை புதுப்பித்துக் கொண்டுள்ளனர் .
ஆதாரை புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில் தான் இருக்கும் சேவைகள் எதுவும் பாதிகாது என ஆதிகாரிகள் கூறியுள்ளனர்.
வரும் 14ஆம் தேதிக்குள் பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது ஆனால் அதற்கு பிறகு இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை பலர் தவறாக புரிந்து கொண்டு வதந்தி பரப்புவதாக தெரிவிக்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.