Homeசெய்திகள்இந்தியா"நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்"- முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்!

“நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்”- முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்!

-

 

உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
File Photo

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளியை வெளியிட்டுள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், கவனமாக இருப்பதே நிலைமையைச் சமாளிக்கப்பதற்கான திறவுக்கோள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சகம் தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், கோழிக்கோட்டிற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பொதுப்பணித்துறை அமைச்சரும், அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

முன்னதாக கேரளாவில் கடந்த 2018- ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது. பின்னர் 2021- ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவானது.

MUST READ