Homeசெய்திகள்இந்தியாவிசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்

விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்

-

- Advertisement -

புஷ்பா படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் பெண் இறந்த வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் அல்லு அர்ஜுன்.

விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்புஷ்பா 2 படத்தின் பிரிமியம் ஷோ கடந்த 4 ம் தேதி  அன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதில் ரசிகர்கள் வரவேற்பை காண்பதற்காக அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு இரவு 9 மணிக்கு சென்றார். ஆனால் அல்லு அர்ஜுன் வருவதற்கு போலீசாரின்  அனுமதி கேட்டு நிலையில்   போலீசார் அனுமதியை புறக்கணித்து இருந்தனர். இருப்பினும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு  வந்ததால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த கூட்டநெரிசலுக்கு  நடிகர் அல்லு அர்ஜுன் மீது சிக்கடப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நாம்பள்ளி  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

பின்னர் உயர்நீதிமன்றம் அவருக்கு  4 வாரத்திற்கு இடைக்கால   ஜாமீன் வழங்கியதால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில் திரைப்படத்துறையை வளர்ச்சிக்கு இந்த அரசு கட்டுப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

புஷ்பா படம் விவகாரத்தில் அல்லு அர்ஜுன் வரவேண்டாம் என போலீசார்  அனுமதியை நிராகரித்தும் அவர் வலுக்கட்டாயமாக வந்தார். இருப்பினும்  அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி தியேட்டருக்குள் அழைத்து சென்றனர். இந்த கூட்ட நெரிசலின் போது அவரது தனி பாதுகாவலர்கள் பொது மக்களை கண்டபடி இழுத்து தள்ளிவிட்டு அவரை தியேட்டருக்குள் அழைத்து சென்றனர்.

இந்த கூட்டம் நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்த நிலையில் அவரது மகன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஒரு பெண் இறந்து விட்டதாகவும் அவரது மகன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறி அவரை உடனடியாக தியேட்டரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கூறினர். ஆனால் அவர் செல்லாமல் தியேட்டருக்குள்ளேயே அமர்ந்திருந்தார் என குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகு போலீசார் வலுக்கட்டாயமாக அவரை வெளியே அழைத்து வந்து அனுப்பி வைத்தனர் என கூறினார். இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் போலீசார் யாரும் தன்னிடம் வரவில்லை பெண் இறந்தது குறித்து எனக்கு மறுநாள் காலையிலயே தெரியவந்தது என தெரிவித்திருந்தார்.

இதற்கு இடையே போலீசார் அல்லு அர்ஜுன் வரும்போது அவரது தனி பாதுகாவலர்கள், பொதுமக்களை தள்ளிவிடும் காட்சிகள் மேலும் கூட்ட நெரிசலில் பெண் இறந்தது மற்றும் அவரது மகன் காயமடைந்து உடனடியாக போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது, அதன் பிறகு போலீசார் அல்லு அர்ஜுனிடம் சென்று அவரை அனுப்பி வைத்தது போன்ற காட்சிகளை வெளியிட்டனர்.

இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் பண்ணை வீட்டிற்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனை இன்று காலை 11 மணிக்கு   விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீஸிற்கு நேரில் ஆஜர் ஆவாரா என்ற  எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையே அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் நேரில் ஆஜராகிறார் என தெரிவித்தனர்.

இதனை அடுத்து போலீசார் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து சிக்கடப்பள்ளி காவல் நிலையம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அல்லு அர்ஜுன்  வீட்டிலிருந்து காரில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். அவர் கார் புறப்பட்டதிலிருந்து காவல் நிலையம் செல்லும் வரை வேறு எந்த வாகனமும் பின் தொடராத வகையில் ரசிகர்கள் யாரும் வராத வகையிலும் ஊடகத்தினரையும்  ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். காவல் துணை ஆணையர் சுரேந்தர் தலைமையில் ஆல்லு அர்ஜுன் வாகனம் போக்குவரத்து சிக்காத வகையில் சிக்னல்களிலும் நிற்காத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்தொடர்ந்து போலீசார் அல்லு அர்ஜுனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் அவரது வழக்கறிஞர்கள் குழுவினரும் உடன் சென்றுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சந்தியா தியேட்டரில் அன்று எவ்வாறு கூட்ட  நெரிசல் ஏற்பட்டது. அங்கு என்ன நடந்தது என்பது தெரிந்து கொள்வதற்காக போலீசார்  தியேட்டருக்கும் அழைத்து செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உள்ளது. அதில் போலீசாரின் விசாரணைக்கு எந்தவித குறிக்கீடும் செய்யக்கூடாது. வேறு யாரிடமும் வழக்கு குறித்து பேசக்கூடாது என தெரிவித்திருந்தது ஆனால் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஜாமினை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்க உள்ளனர்.

MUST READ