நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜல்பள்ளியில் உள்ள நடிகர் மோகன் பாபு வீட்டில் கடந்த சில நாட்களாக அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கு ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மோகன்பாபுவின் மற்றொரு மகன் மஞ்சு விஷ்ணு இன்று வெளிநாட்டில் இருந்து ஐதராபாத் வந்தார்.
அவர் வருவதற்கு முன்பே அவரது தரப்பில் 30 தனிப்படை பாதுகாவலர்களும் மஞ்சு மனோஜ் தரப்பில் தனிப்படை துகாவலர்களும் வீட்டில் குவிக்கப்பட்டனர். காலை முதலே வீட்டின் முன்பு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே மஞ்சு மனோஜ் தனக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில டிஜேபிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மோகன் பாபு வீட்டிற்கு மஞ்சு மனோஜ் சென்ற வாகனத்தை விஷ்ணுவின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற ஊடகவியலாளர்களை மோகன்பாபு மற்றும் பாதுகாவலர்கள் தாக்கி கேமிரா, மைக்கை உடைத்து அடித்து விரட்டினர்.
இதனால் ஊடகத்தினர் மீது மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்கியதாக கண்டனம் தெரிவித்தனர். ஜல்பல்லியில் உள்ள மோகன்பாபு வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!