
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – ஊழியர் கைது
இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்றுள்ள வழிபட்ட ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புகழ் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், ராஜ்பவனுக்கு சென்று அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், தனது ஆன்மீக பயணத்தைத் தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்த், புகழ்பெற்ற ஆசிரமங்களுக்கு சென்று மடாதிபதிகளைச் சந்தித்துப் பேசி அவர்களுடன் உணவருந்தினர்.

தற்போது, உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “நான் முதலமைச்சருடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளேன். இது ஒரு சிறப்பான பயணம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!
தனது ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களையும், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.